Categories
உலக செய்திகள்

ஃபேஸ்புக் பக்கங்கள் அனைத்தும் முடக்கம்… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

மியான்மர் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அனைத்து பேஸ்புக் பக்கங்களும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மியான்மர் நாட்டின் தற்சமயம் நடைபெற்ற தேர்தலில் புதிதாக ஆட்சி அமைந்தது. இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கும், புதிதாக அமைந்த ஆட்சிக்கும் எதிரான கருத்து மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் ஆலோசகரான ஆங் சான் சூகி மற்றும் அந்நாட்டின் அதிபர்களை ராணுவம் சிறை பிடித்துள்ளது.

இதன் காரணமாக மியான்மரில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் ஓர் ஆண்டிற்கான அவசரநிலை பிறப்பித்துள்ளதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மியான்மர் நாடானது ராணுவத்தின் பிடியில் இருப்பது உலக நாடுகளுக்கு இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மர் மற்றும் பிற நகரங்களில்  இயக்கப்படும் விமானங்களை அனுமதியின்றி இயக்க தடை விதிப்பதாகவும், நகரங்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் ஊரடங்கு அமல் படுத்தபடுவதாகவும், சிலநேரங்களில் இணைய சேவைகள் துண்டிக்கப் படுவதாகவும், ராணுவ அடக்குமுறையில் கூறுகின்றனர்.

இந்த ராணுவத்தின் அடக்குமுறையை எதிர்த்து பல்வேறு உலக நாடுகளின் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமூக ஊடகமான ஃபேஸ்புக் தற்காலிகமாக மியான்மரில் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் செயல்படுகிறது. இதில் பல்வேறு மக்கள் தங்கள் போராட்டங்களை குறித்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். மியான்மர் நாட்டின் ராணுவத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கமான டாட்மேடவ் ஃபேஸ்புக்கில் வரம்பு மீறி செயல்பட்டதற்காக இந்தப் பக்கத்தை முடக்கியது.

மேலும் தொடர்ந்து வரம்புமீறி செயல்படுவதால் தற்சமயம் முடக்குவதாக தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மியான்மர் நாட்டில் செயல்படும் அந்நாட்டு ராணுவத்தின் ஃபேஸ்புக் பக்கங்களும் ,அதை தொடர்பாக உள்ள பக்கங்களும் முடக்கப்பட உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த முடக்கமானது , இதை சார்ந்திருக்கும் இன்ஸ்டாகிராம் சமூக வலை தளத்திற்கும் செயல்படும் என்று கூறியுள்ளது. மியான்மர் ராணுவ கட்டுப்பாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மியாவடி   டிவி மற்றும் எம்ஆர் டிவி பேஸ்புக்கால் முடக்கப்பட்டது.

Categories

Tech |