Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் கல்விக் கடன் ரத்து?… 3 மணி நேரத்திற்குள் அறிவிப்பு?…!!!

தமிழகத்தில் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி கடந்த சில நாட்களாக அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது.

அதன்படி விவசாயிகளின் பயிர்க் கடன் ரத்து, கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக் கடன் ரத்து, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி என பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனையடுத்து கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்க உள்ளதால், அதற்கு முன்னதாக கல்விக் கடன் ரத்து குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்று மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Categories

Tech |