Categories
மாநில செய்திகள்

BREAKING: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்க தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடைத்துள்ளது. மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ராஜஸ்தான், அசாம், மேகாலயா மற்றும் நாகலாந்து மாநில அரசுகள் குறைத்துள்ளன. அதனால் அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 2 சதவீதம் உடனடியாக குறைக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். அதனால் புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 குறைய வாய்ப்புள்ளது. மேலும் கொரோனா காரணமாக புதுச்சேரியின் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |