Categories
உலக செய்திகள்

“ஐ.. ஜாலி..!” முகக்கவசத்திற்கு பை பை… கோடைகாலம் வந்தாச்சு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பிரிட்டனில் கோடைகாலங்களில் மக்கள் முகக்கவசம் முழு நேரமும் அணிய தேவையில்லை என்று துணை தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். 

பிரிட்டனில் துணைத் தலைமை மருத்துவ அதிகாரியான Jenni Harish பிரிட்டன் மக்கள் வருகின்ற கோடைகாலங்களில் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது கோடை காலங்களான ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் போன்ற மாதங்களில் கொரோனா தொற்று குறைய வாய்ப்புள்ளது. எனவே மக்கள் இந்த காலகட்டங்களில் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுவாக கோடை காலம் என்பது தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கக்கூடிய காலம் என்றும் இக்காலகட்டங்களில் தொற்று நோய் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் நம்புவதாக தெரிவித்துள்ளனர். எனினும் குளிர் காலங்கள் மீண்டும் வரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |