Categories
லைப் ஸ்டைல்

“திராட்சை விதை எண்ணெயில் இவ்வளவு நல்லது இருக்கா”…? இது தெரியாம போச்சே… கட்டாயம் வீட்டில் வாங்கிவைங்க..!!

நாம் திராட்சையில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை குறித்து இதுவரை தெரிந்து இருப்போம். ஆனால் திராட்சை விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றது என்பதை பற்றி இதில் பார்ப்போம்.

திராட்சை எண்ணெய் பயன்கள்:

இதில் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வைட்டமின் ஈ காணப்படுகிறது. இந்த திராட்சை விதை எண்ணெய் உங்களின் சருமத்திற்கு மிகவும் நல்லது என்று சில ஆய்வுகள் கூறுகின்றது. இந்த திராட்சை விதை எண்ணெய் சருமம் மற்றும் கூந்தலுக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் நல்ல ஆரோக்கியத்தை தரும் என்று கூறப்படுகிறது.

திராட்சையில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ்கள் அதிகம் உள்ளது. திராட்சை விதை எண்ணெயில் கொழுப்பு சுத்தமாகவும், புரோட்டின் இல்லாமலும் இருக்கின்றது.

திராட்சை விதை எண்ணெயில் வைட்டமின்-இ காணப்படுகிறது. இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்த எண்ணெயில்  நிறைவுறா கொழுப்பு களைக் கொண்டுள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் ரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகளை தடுக்கின்றது.

திராட்சை விதை எண்ணெயில் அமிலங்கள் இருப்பதால் காயங்களை ஆற்ற இது உதவுகிறது.  இது குளிர்காலத்தில் வெப்பம் அல்லது ரசாயனங்கள் இல்லாமல் எண்ணெய்  எந்திரத்தின் மூலம் எடுக்கப்படுகின்றது. இதனால் இதில் உள்ள ஊட்டச் சத்து பாதுகாக்கப்படுகிறது. இதில் உள்ள கொழுப்புகள் ஆக்ஸிஜனேற்றத்திற்கு மிகவும் உதவுகிறது.

எனவே திராட்சை விதை எண்ணெய்யை குளிர்ந்த இருட்டான இடங்களில் டப்பாக்களில் மூடி பாதுகாக்கப்பட வேண்டும். இது 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்க உதவும். இதை பயன்படுத்தி நீங்கள் சாலட், பாஸ்தா இவற்றை டிரஸ்ஸிங் செய்ய பயன்படுத்தலாம்.

Categories

Tech |