அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் வினோத் என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி மோனலிசா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். வினோத் அரசு பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவர் அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர் பணியிலிருந்து அரசு போக்குவரத்துக்கழக நேர காப்பாளர் பணிக்கு மாற்றப்பட்டார்.
இதனால் வினோத் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பழைய அறை ஒன்றில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.