அமெரிக்காவின் துணை அதிபர் பொறுப்பில் இருக்கும் கமலா ஹாரிஸ் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மாகாணத்தில் துணை அதிபர் பொறுப்பில் கமலா ஹாரிஸ் பதவி வகித்துள்ளார். கமலா ஹாரிஸ் தாய் வீடானது தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டது. இதனால் இவரது வெற்றியை அக்கிராம மக்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள். இச்சமயத்தில் அவரின் உறவினர்களில் ஒருவர் அவரின் பெயரை பயன்படுத்தி லாபம் இதற்கு வெள்ளை மாளிகையிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மீனா ஹாரிஸ் என்பவர் கமலா ஹாரிஸ் சகோதரி மகள் ஆவார். இவர் பிரத்யேகமாக பெண்களுக்கான பொருட்களை ஆன்லைனில் நடத்தி வந்துள்ளார். இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் வித விதமான ஆடைகள், புத்தகங்கள் போன்ற பல பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்தி, எடுத்துக்காட்டிற்கு ‘வைஸ் ப்ரெசிடென்ட் ஆன்ட்டி’ என்ற வாசகத்துடன் கூடிய பிரிண்ட் செய்யப்பட்ட துணிகளை விற்பனை செய்துள்ளார்.
இதனால் கமலா ஹாரிஸ் பெயரைப் பயன்படுத்தி லாபம் பெறுவதாக தெரியவந்தது. இது பற்றிய செய்தி வெள்ளை மாளிகைக்கு கிடைத்தது. இதனால் மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகையின் சார்பில் அறிவுரை வழங்கியது. இதில் அமெரிக்கத் துணை அதிபராக கமலா ஹாரிஸின் பெயரையோ மற்றும் அவரது புகைப்படத்தையோ பயன்படுத்தி தங்களின் லாபத்திற்காக சமூகவலைத்தள பக்கங்களில் பிரபலமாகும் நோக்கில், அவரின் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் மீனா ஹரிஷ் வெளிநாடுகளில் நடக்கும் விவகாரங்களை பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதாகவும், சமீபத்தில் நடைபெற்று வரும் டெல்லியில் விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக தமது கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிக்கத்தக்கது.