Categories
உலக செய்திகள்

“லாபத்தில் பங்கு”…. ஃபேஸ்புக், கூகுள் நிறுவனத்திற்கு…. ஆஸ்திரேலியா வைத்த ஆப்பு…!!

ஆஸ்திரேலியா நாட்டு செய்தி ஊடகங்களை பயன்படுத்தும் ஃபேஸ்புக், கூகுள் நிறுவனம் பணம் தரவேண்டும் என்ற சட்டத்தை இயற்றியுள்ளது.

ஆஸ்திரேலிய அரசு முகநூல் புத்தகம் மற்றும் தேடுதல்தளம் போன்ற நிறுவனங்கள் ஆஸ்திரேலியா நாட்டு செய்தி ஊடகங்களை பயன்படுத்த அதில் வரும் லாபத்தில் பங்கு தரவேண்டும் என்ற ஒரு சட்டத்தை  இயற்றியுள்ளது. இச்சட்டத்திற்கு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்துள்ளனர்.

இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு பின்  இச்சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் ஃபேஸ்புக் நிறுவனமானது ஆஸ்திரேலியாவின் செய்தி ஊடக நிறுவனத்தின் ஃபேஸ்புக்  பக்கத்தை முடக்கியுள்ளது.

இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஃபேஸ்புக் நிறுவனம், ஆஸ்திரேலியா ஊடக நிறுவத்துடன் போட்டுக்கொண்ட உடன்படிக்கையின் படி கிடைக்கின்ற லாபத்தை பகிரும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |