Categories
தேசிய செய்திகள்

பிரமிக்க வைக்கும் திருக்குறள்… ராகுல் காந்தி பெருமிதம்…!!!

தான் திருக்குறளைப் படித்து வருவதாகவும் அதன் கருத்தாழம் தன்னை பிரமிக்க வைக்கிறது எனவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

திருக்குறள் ஆனது உலகப் பொதுமறை நூல் என்று அழைக்கப்படுகிறது. இந்நூலானது தமிழ் மொழி இலக்கியங்களில் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். தற்போது திருக்குறளானது   இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் மத்திய அரசுத் தலைவர்களும் தங்கள் மேடைப் பேச்சுகளிலும், திருக்குறளின் பொருள் கூறி தன் பேச்சை தொடங்குவது ஒரு காரணமாக உள்ளது. இதனால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் திருக்குறளின் பெருமையைப் பற்றி பலரும் கூறியுள்ளனர்.

இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடியும் தனது அரசு விழாக்களிலும், மத்திய அமைச்சரவையிலும் திருக்குறளின் பொருள் உணர்த்தி பேசி வந்துள்ளார். இந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தியும் திருக்குறளின் மீது கவனத்தை ஈர்த்துள்ளார். இவ்வாறு அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்’ நான் திருக்குறளை வாசித்து கொண்டிருப்பதாகவும், திருக்குறளின் கருத்தானது என்னை வியப்பில் ஆழ்த்துவதாக அவர் பதிவிட்டுள்ளார்’.

Categories

Tech |