டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதி அறிவிகின்றனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநில தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசும் போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல்கள் முன்னெச்சரிக்கையுடன் தேர்தலை நடத்துகின்றோம். தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல் வருவதாக தெரிவித்தார்.