இங்கிலாந்தில் பேரனுக்காக உணவு வாங்கச் சென்ற முதியவருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் மெக்டொனால்ட் உணவு மிகவும் பிரபலமானது. இதற்காக மக்கள் வெகு தொலைவில் இருந்தும் வருவதுண்டு. இந்த உணவு பொதுவாக அனைவரும் மகிழ்ச்சியாக விரும்பி உண்ணும் உணவாகும். இங்கிலாந்தின் லூட்டனியில் வசித்து வருபவர் ஜான் பாபேஜ் இவரது பேரன் டைலரை. இவர் தன் பேரனுக்கு மெக்டொனால்ட் இதிலிருந்து 2.79 டாலர்கள் (ரூ. 200) மதிப்புள்ள ஹாப்பி மில் வாங்கி தந்துள்ளார். பிறகு இருவரும் உணவு சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள பூங்காவில் பேரனை விளையாட அனுப்பி வைத்தார்.
தன் பேரன் அவரது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் (72) வயது பாப்பேஜ் காரில் காத்திருந்தார். சிறிது நேரம் கழித்து முதியவர் காரில் தூங்கிவிட்டார். இவர் ஒரு விவசாயி உறங்கிக் கொண்டிருந்ததால் அவருக்கு சரியாக கொடுக்கப்பட்ட இரண்டு மணி நேர இலவச பார்க்கிங் நேரம் முடிவடைந்து விட்டது. அனுமதிக்கப்பட்ட பார்க்கிங் நேரம் முடிந்த பின்பு சுமார் 17 நிமிடம் கார் பார்க்கிங் ஏரியாவில் இருந்தது. இதனால் கார் பார்க்கிங் நடத்தும் ஹைவியூ பார்க்கிங் நிறுவனம் 400 டாலர்கள் அபராதம் விதித்தது.
இந்த அபராதம் குறித்த ரசீது முதியவர் தற்போது வசித்துவரும் முகவரிக்கு அனுப்பபடாததால் இப்படி ஒரு அபராதம் விதிக்கப்பட்டது எனக்கு தெரியாது என்று பாபேஜ் கூறினார். மேலும் கடன் வசூல் நிறுவனத்தின் டி .சி .பி .எல் அதிகாரிகள் முதியவரின் வீட்டை தேடி கண்டுபிடித்து 400 டாலர் அபராதமும் 1651 டாலர் காஸ்ட்டும் (ரூ .2 லட்சம்) செலுத்துமாறு கூறியது. இதனால் பாபேஜும் மனைவி லிபியும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
இதேபோன்று இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நபர் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி லூட்டானில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டார். சொந்த ஊரில் மெக்டொனால்ட் விற்பனை நிலையம் இல்லாததால் அவ்வளவு தூரம் பயணம் செய்ததாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதனை வில்ட்ஷயர் பொலிசார் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக அவருக்கு 200 டாலர் (ரூ . 200000 )அபராதமாக விதிக்கப்பட்டது