Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பதவிக்காலம்…. மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது – சுனில் அரோரா…!!

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதி அறிவிகின்றனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநில தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல்கள் முன்னெச்சரிக்கையுடன் தேர்தலை நடத்துகின்றோம்.

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல். கொரோனா காலம் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேர்தல் நடத்துகின்றோம். 5 மாநிலங்களில் மொத்தம் 2.7 லட்சம் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார்.கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி. வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற தயாராக உள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது என்று கூறியுள்ளார்.

 

Categories

Tech |