தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து அரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு 10.5%உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எம்பிசி-வி என்ற பிரிவு வன்னியர் களுக்காக ஏற்படுத்தப்பட்டு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு தற்காலிகமானது என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஜாதிகள் குறித்த புள்ளி விவர சேகரிப்பு பிறகு 6 மாதம் கழித்து மாற்றி அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி எம்பிசியில் உள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினர் 7 சதவீதம் உள் ஒதுக்கீடு என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வெறும் 7 சதவீதம் உள் ஒதுக்கீடு பெறவுள்ள சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் உள்ளன. தமிழகத்தில் மொத்த இட ஒதுக்கீடு 69 சதவீதம், அதில் பிற்படுத்தப்பட்டோர் 30%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20 சதவீதம், பட்டியலினத்தவர் 19 சதவீதம். மிக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ஒதுக்கீடு வழங்க மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.