ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வந்த குடியரசுத் தலைவர் பலத்த பாதுகாப்புகளுடன் அத்திவரதரை தரிசனம் செய்த்தார்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அத்திவரதரை காண அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை காண வருவதையொட்டி காஞ்சிபுரத்தில் 3 அடுக்கு கொண்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து தனது குடும்பத்துடன் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு வந்த குடியரசு தலைவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சிபுரம் வருகை தந்த நிலையில், கோவிலுக்குள் பலத்த பாதுகாப்புகளுடன் சென்று தனது குடும்பத்துடன் தரிசனம் செய்தார். குடியரசு தலைவர் வருகையால் பொது மக்களுக்கான தரிசனம் சில மணி நேரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.