Categories
உலக செய்திகள்

பட்டினியாய் கிடந்த கால்நடைகள்…2 மாதங்களாக நடுக்கடலில் ஏற்பட்ட அவல நிலை… வெளியான புகைப்படம்….!

கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட கால்நடைகள் இரண்டு மாதங்களாக தீவனங்கள் இன்றி  நடுக்கடலில் தத்தளித்து வந்த அவலநிலை சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்பெயினில் உள்ள கார்டகெனாவில் இருந்து கரீம் அல்லாஹ் என்ற கப்பல் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி 895 கால்நடைகளுடன் துருக்கியை நோக்கி சென்றது. ஆனால் ஸ்பெயினில் கால்நடைகளுக்கு ஏற்படும் போவின் புளூடோங் என்ற தொற்று பரவி வருகிறது. அதனால் கால்நடைகளை ஏற்றி சென்ற கப்பல் கரைக்கு வர துருக்கி அரசு தடை விதித்திருந்தது.

இதனால் அந்த கப்பல் கரைக்கு செல்ல முடியாததால் கால்நடைகளுக்கு தீவனங்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தீவனம் இன்றி 2 மாதங்கள் கடலில் தத்தளித்து வந்த கால்நடைகள் தற்போது ஸ்பெயினுக்கு திரும்பி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |