ரயில் நிலையத்தில் 16 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பாதுகாப்பு பணியாளர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சோலாங் ரயில் நிலையத்தில் 16 வயது இளம்பெண் ஒருவர் முகேரியன் அருகே உள்ள தனது ஊருக்கு செல்ல காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பஞ்சாப் பாதுகாப்பு பணியாளர்கள் அவரிடம் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று கேள்வி கேட்டுள்ளனர். இதையடுத்து அப்பெண்ணை இருவரும் நைசாக பேசி அங்கிருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வன்கொடுமை செய்தவர்கள் தில்பாங் சிங் மற்றும் தரம்பால் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், ரயில் நிலையத்தில் அரசு ரயில்வே போலீஸ் பதவியின் பொறுப்பாளராக இருந்த உதவி சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் எனவும் டிஎஸ்பி சுரிந்தர் குமார் தெரிவித்துள்ளார்.