இந்தியாவில் எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை தான். செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வது, கரண்ட் பில் கட்டுவது என அனைத்துமே டிஜிட்டல் முறையில் வந்துவிட்டது. இந்த வகையில் சென்னை மக்களுக்கு ஏற்ற புதிய வசதியாக “நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு” என்ற திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளா.ர் இந்த திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி, பெருநகர சென்னை கார்ப்பரேஷன் மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்துகின்றன.
இது ஒரு ரூபே கார்டின் ஒரு வகையான காண்டாக்ட்லெஸ் பிரீபெய்டு கார்டு. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் சென்னை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த கார்டின் மூலம் சென்னைக்குள்ளேயே வரி செலுத்துவது, ஹோட்டலில் பில் செலுத்துவது, ஆன்லைன் ஷாப்பிங் போன்ற வசதிகளை டிஜிட்டல் முறையில் பெறமுடியும். இந்த வசதி இன்னும் ஓரிரு வாரங்களில் நடைமுறைக்கு வந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. கார்டு பிளாக், கார்டு ஆக்டிவேட், பின் ரீசெட் போன்ற பல்வேறு வசதிகள் இந்த கார்டுகளில் உள்ளன.
https://smartcity.icicibank.com/customer/customerportal?pagename=namma என்ற இணையதளம் மூலமாக வாடிக்கையாளர்கள் பல்வேறு சேவைகளைப் பெறமுடியும். டிஜிட்டல் முறையில் இந்த கார்டுகளில் பணத்தை ஏற்றிப் பயன்படுத்தலாம். அல்லது iSmart City app மூலமும் ரீசார்ஜ் செய்யலாம். இந்த கார்டுகளை சென்னை பார்க் டவுனில் இருக்கும் பெருநகர சென்னை மாநகராட்சி மெயின் அலுவலகம் அல்லது கோடம்பாக்கம் பெருநகர சென்னை மாநகராட்சி ஜோன் 10 ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் வாங்கி கொள்ளலாம். மேலும் இங்கேயே இந்த கார்டுகளை டாப் அப் செய்து கொள்ளலாம்.