Categories
உலக செய்திகள்

அவங்களுக்கு இப்போ அவசரம் இல்லை… இரண்டாம் கட்ட தடுப்பூசி யாருக்கெல்லாம்?… வெளியான முக்கிய அறிவிப்பு…!

பிரிட்டனில் இரண்டாம் கட்ட தடுப்பூசி யாருக்கெல்லாம் செலுத்தப்படும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இரண்டாம் கட்ட தடுப்பூசி யாருக்கெல்லாம் செலுத்தப்படும் என்ற தகவலை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. வயதுவரம்புகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 40 முதல் 49 வயதுவரை இருப்பவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கவிருக்கிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய நன்மைகளை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அடுத்ததாக தடுப்பூசி போட வேண்டும் என்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனாவால் வயது முதிர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்படுவதால் வயது வரம்பு அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதே சிறந்த வழி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தொழிலின் அடிப்படையில் தடுப்பூசி வழங்குவது மிகவும் சிக்கலான காரியமாகும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |