ஈராக்கில் உள்ள சிறையில் மாரடைப்பால் உயிரிழந்த பெண்ணை மீண்டும் தூக்கில் போட்டு தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கில் தனது கணவர் தன்னையும் மகளையும் தவறாக நடத்துவதாக கூறி கணவரை கொலை செய்த சஹாரா ஸ்மைலி என்ற பெண் சிறையில் அடைக்கப்பட்டார். சஹாராவின் கணவர் ஒரு உளவுத் துறை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். உளவுத்துறை அதிகாரியை கொலை செய்ததால் சஹாராவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. பிறகு சஹாரா மேடைக்கு தூக்கிலிடுவதற்கான அழைத்துவரப்பட்டார் . இந்நிலையில் அவருக்கு முன்னால் 16 குற்றவாளிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வரிசையில் நின்றனர்.
ஒவ்வொருவராக 16 பேரையும் தூக்கில் போடப்படும் கொடூரமான காட்சியை சஹாரா பார்க்க வேண்டுமென்று அதிகாரிகள் கட்டாயப்படுத்தினார்கள். அந்த கொடூர சம்பவத்தை பார்க்க மாட்டேன் என்று சஹாரா பலமுறை கூறியும் கேட்காத அதிகாரிகள் மீண்டும் கட்டாயப்படுத்தியதால் திடீரென்று சாஹாராவுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு தூக்கிலிடுவதற்கு முன்பே உயிரிழந்தார். ஈரானில் பின்பற்றப்படும் கிசாசின் ஷரியா சட்டத்தின்படி (‘கண்ணுக்குக் கண்’) பழிவாங்குதல்.
ஈரானைப் பொருத்தவரை ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அல்லது கொலை செய்வதற்கு தூண்டினாலோ இறந்தவருக்காக பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக குற்றவாளிகளை தூக்கில் போடப்படுவது பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் தூக்குக் கயிற்றில் குற்றவாளி நிற்கும்போது பாதிக்கப்பட்டவர் அல்லது உயிரிழந்தவரின் உறவினர்கள் நாற்காலியை காலால் எட்டி உதைத்தாள் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையும் பின்பு இறந்தவர்களின் உறவினர்களுக்கு நிம்மதி மற்றும் நீதி கிடைப்பதாக பொருள் என்பது அந்நாட்டின் சட்டமாக உள்ளது.
ஆனால் தற்போது மாரடைப்பால் இறந்து போன சஹாராவால் கணவரின் உறவினருக்கு எந்த நீதியும் கிடைக்கப்போவதில்லை. எனவே இறந்துபோன சஹாராவின் உடலை தூக்கில் தொங்க விடப்பட்டு அவரது மாமியார் சஹாரா நிற்கும் நாற்காலியை காலால் எட்டி உதைக்க வேண்டும் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளில் கடந்த ஆண்டு 200 க்கும் மேற்பட்ட மரணதண்டனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றமற்றவர்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்க முடியாமல் போனவர்களை ஈரான் சிறைத்துறை தூக்கிலிடப்பட்டு உள்ளது.
ஒரு முன்னாள் உளவுத்துறை அதிகாரி கடந்த 2014 ஆம் ஆண்டு கொலை செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 26 வயதான நபர் தூக்கிலிடப்பட்டது சர்வதேச நாடுகளில் கண்டனத்தை ஏற்படுத்தியது. இஸ்லாம் நாடுகளில் கடுமையான சட்டதிட்டங்கள் விதிக்கப்பட்டு இருப்பதை நாம் கேள்விப்பட்டதுண்டு ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் உண்மையில் மனிதர்களை மிருகத்தனமாகவும் இரக்கமற்றதாகவும் இருப்பது கொந்தளிக்கவைத்துள்ளது