பிரிட்டன் இளவரசர் ஹரி அவர் ராஜ குடும்பத்தை விட்டு விலகவில்லை என்று கூறியுள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஹரி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக டபுள் டெக்கர் பேருந்து ஒன்றில் அமர்ந்து பேட்டி அளித்துள்ளார். அவர் அதில் தான் ராஜ குடும்பத்தை விட்டு விலகவில்லை பங்களிப்பை தான் தற்காலிகமாக நிறுத்தி உள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு மன அழுத்தம் தான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு பொறுப்பான கணவனாக, தந்தையாக நான் என்ன செய்ய வேண்டுமோ அதை நான் எப்போதும் செய்வேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
மற்ற ராஜ குடும்ப உறுப்பினர்கள் என்ன நினைத்தாலும் அதுபற்றி அவருக்கு கவலை இல்லை என்றும் , அவர் எப்போதும் ராஜ குடும்பத்தை விட்டு விலக மாட்டேன் என்றும் கூறியுள்ளார் . ஆனால் இந்த பேட்டி ஹரி மேகனின் பட்டங்களை மகாராணியார் பறிப்பதற்கு முன் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.