Categories
தேசிய செய்திகள்

தற்கொலை செய்ய முடிவெடுத்து… ஐஸ்கிரீமில் விஷம்…”தங்கை மற்றும் மகனை பலிகொடுத்த பெண்”…!!

விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளாவின் காசராகோடு மாவட்டத்தில் உள்ள வர்ஷா (25)  என்ற ஒரு பெண் தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்காக ஐஸ்கிரீமில் எலி விஷத்தை கலந்து வைத்துள்ளார். அப்போது பாதி ஐஸ்கிரீமை சாப்பிட்ட பிறகு அவர் மயக்க நிலையில், அறைக்குச் சென்றார். மீதி இருந்த ஐஸ்கிரீமை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். அந்த ஐஸ்கிரீமை பார்த்த வர்ஷாவின் சகோதரி(19) மற்றும் 5 வயது மகன் ஆகிய இருவரும் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர். அதனை சாப்பிட்ட பிறகு உடனே இருவரும் பிரியாணி சாப்பிட்டனர். சில மணி நேரங்களில் சிறுவனுக்கு கடுமையான வாந்தி ஏற்பட்டு உள்ளது.

உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அதுமட்டுமன்றி ஐஸ்கிரீமை சாப்பிட்ட வர்ஷாவின் சகோதரியும் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் பாதி ஐஸ்கிரீம் மட்டும் சாப்பிட்டு உயிர் பிழைத்துக் கொண்டார். இந்த சம்பவம் பற்றி போலீஸாருக்கு உடனே புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் வர்ஷாவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |