இயக்குனர் அகத்தியன் தனது மூன்று மகள்கள் மற்றும் மருமகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் இயக்குனர் அகத்தியன் நடிகர் அஜித்தின் ‘காதல் கோட்டை’ படத்திற்காக தேசிய விருது பெற்றவர் . இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர் . இவரது மூத்த மகள் கனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் . இவர் இயக்குனர் திருவை திருமணம் செய்து கொண்டார் . அதேபோல் இயக்குனர் அகத்தியனின் இரண்டாவது மகளும் நடிகையுமான விஜயலட்சுமி இயக்குனர் பெரோஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .
இந்நிலையில் இவரது மூன்றாவது மகள் நிரஞ்சனிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது . இந்நிலையில் இயக்குனர் அகத்தியன் தனது மூன்று மகள்கள் மற்றும் 3 மருமகன்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.