காவல் துணை ஆய்வாளரின் மகன் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐசிஎப்,நியூ ஆவடி ரோடு பகுதியில் சில நாட்களாக அங்குள்ள கடைகளில் கத்தியை காட்டி மிரட்டி பல நபர்கள் பணம் பறித்து வந்தனர். இந்தப் புகார் காவல் துறைக்கு வந்து கொண்டே இருந்தது, இதையடுத்து பிப்ரவரி 24 இரவு சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் சுற்றி திரிநவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐசிஎப் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். அதில் அவர் அண்ணாநகர் காவல் குடியிருப்பு பகுதியை சேர்ந்த எபினேஷ் சஞ்சய் ராஜ் என்பது தெரியவந்தது.
மேலும் இவரின் தந்தை விவேக் ராஜன் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றுவதும் தெரியவந்தது. எபினேஷ் சஞ்சய் ராஜ் அன்னை சத்யா நகரை சேர்ந்த ராபர்ட் உட்பட 5 பேருடன் ஐசிஎப் பகுதியில் உள்ள கடைகளில் கத்தியை காட்டி மிரட்டி பணம் வசூலித்திருப்பது தெரியவந்தது. இதேபோல் அண்ணாநகர் காவல்நிலையத்தில் 2014ஆம் ஆண்டு எபினேஷ் சஞ்சய் ராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவாகியுள்ளதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்