Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை பூர்ணாவின் ‘சுந்தரி’… படத்தின் பரபரப்பான டிரைலர் ரிலீஸ்…!!!

நடிகை பூர்ணா நடிப்பில் உருவாகியுள்ள சுந்தரி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நடிகை பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர்  கொடிவீரன், சவரக்கத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் . கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘காப்பான்’ படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‌ மேலும் இவர் தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் .

இந்நிலையில் இயக்குனர் கல்யாண்ஜி கோக்கனா இயக்கத்தில் நடிகை பூர்ணா நடிப்பில் உருவாகியுள்ள ‘சுந்தரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . இந்த படத்தில் அர்ஜுன் அம்பதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |