கன்னி ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் செயல்களில் சில தாமரங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நீங்கள் இன்று பொறுமையாக இருக்கவேண்டும். நீங்கள் கடவுள் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் மன ஆறுதல் பெறலாம்.
பணியிடத்தில் சக பணியாளர்களுடன் சில பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் உறவில் மகிழ்ச்சி நிலவ பொறுமை தேவை. இன்று உங்கள் கோபத்தால் உங்கள் துணையிடம் சில பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது அதிக செலவு செய்ய வாய்ப்பு உள்ளது. சேமிக்கும் வாய்ப்பு குறைந்து காணப்படும். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது ஒவ்வாமை போன்ற பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
தியானம் மேற்கொள்வதன் மூலம் சிறந்த ஆறுதல் பெறலாம்.
மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று ஹனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை வடமேற்கு. அதிர்ஷ்டமான எண் 7. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு நிறம்.