மகரம் ராசி அன்பர்களே..!
முறையான முயற்சி உங்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற உதவும்.
பலன்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். நண்பர்களின் தொடர்பு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்களின் பணிகளை முடிக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் நீங்கள் பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. பணிகளை ஆற்றும் பொழுது கவனம் தேவை. தங்களின் துணையுடன் நல்லுறவை பராமரிக்கிறீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பணத்தை சேமிக்க வேண்டும் என்ற ஆவல் உங்களிடம் இருக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நோய்எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக கால்வலி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும், சற்று முயற்சி செய்தால் வெற்றிப் பெறலாம். நீங்கள் முருக வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 8. அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.