நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் வாழ்க்கை முறையை மார்பக புற்றுநோய் வருவதற்கு காரணமாக உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை இந்த நோய் பாதிக்கின்றது. தற்போது 30 வயதுள்ள பெண்களுக்கும் இந்த புற்றுநோய் உண்டாகிறது. மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு ரத்தப்போக்கு பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
ஆரம்ப காலத்திலேயே இதனை சரி செய்யாவிட்டால் ஆபத்துக்கள் ஏற்படும். இந்த நோயானது 10% பரம்பரை பரம்பரையாக வரும் என்று கூறப்படுகிறது. மீதும் 50% உடல் பருமன், புகைப்பிடித்தல், மதுபானம் உட்கொள்வது போன்றவர்களால் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் .எனவே இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.