கேரளா ஹைகோர்ட் அரசியலில் ஈடுபடுவதற்கு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
கேரள மாநிலத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிட்டு, பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கேரள ஐகோர்ட்டில் அதனை எதிர்த்து ஜிபு தாமஸ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அரசியலில் ஈடுபட அரசு பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் இதற்கு மாறாக தேர்தலில் போட்டியிடவும், பிரச்சாரத்தில் ஈடுபடவும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தடை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இவ்வாறு செய்வதன் மூலம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் அரசியலில் ஈடுபட தடை விதிக்கப்பட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசியலில் ஈடுபடுவதற்கு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தடை விதிப்பதாகவும், ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபட அனுமதி அளித்தது அரசியலமைப்புக்கு எதிரான குற்றம் ஆகும் என உத்தரவிட்டார்.