திருமணமான ஒரு சில மணி நேரத்தில் மாப்பிள்ளை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த 27 வயதான விக்னேஸ்வரன் என்ற நபருக்கும் சாயல்குடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று காலை பத்து முப்பது மணிக்கு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து பெண் வீட்டில் பாலும் பழமும் அருந்த சென்றுள்ளனர். அங்கு பால் பழமும் அருந்திய பிறகு மாப்பிள்ளை விக்னேஸ்வரன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சாய்ந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அழைத்து செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவர் அதிக சோர்வாக இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். திருமணமாகி ஒரு சில மணி நேரத்தில் மணமகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.