Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு… வெளியான திட்டம்…!!

மாநகராட்சியில் பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஒரு சிறந்த திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

கடந்த வருடம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஏராளமான அரசு பள்ளி மாணவ-மாணவியர்கள் நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்பு பெரும் வாய்ப்பை பெற்றனர்.

இந்நிலையில் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ” நீட் என்னால் முடியும்” என்ற சிறப்புப் பயிற்சியை நூறு நாட்களுக்கு இலவசமாக அளிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்தப் பயிற்சி inner wheel district 323 மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு ஆகியவை மூலம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |