செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை நீக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சுற்றிலும் நோய்களை பரப்பும் வகையில் கொட்டபட்டுள்ள மருத்துவக் கழிவுகளை முழுமையாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பட்டுள்ளது .பல்வேறு அதிநவீன வசதிகளை கொண்ட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று கொள்கின்றனர் .
ஆனால் இங்கு தினமும் வரும் மருத்துவக் கழிவுகள் முழுமையாக நீக்கப்படாமல் அங்குள்ள பிணவறை அருகிலும், மருத்துவமனை வளாகத்தினை சுற்றியுள்ள பல்வேறு இடத்திலும் கொட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது .அதன் மூலம் சேரும் மருத்துவக் கழிவுகளால் எழும் துர்நாற்றம் நோயாளிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் . மழை காலங்களில் மருத்துவக் கழிவில் இருந்து கடும் துர்நாற்றம் அடிப்பதாக மருத்துவமனைக்கு அருகில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர் .ஆகவே இந்த மருத்துவ கழிவுகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்மென்ற கோரிக்கையை பொது மக்கள் விடுத்துள்ளனர் .