Categories
தேசிய செய்திகள்

800 ரூபாய் சிலிண்டர் 94 ரூபாய் மட்டுமே… அதிரடி சலுகை… உடனே முந்துங்கள்…!!!

LPG சிலிண்டரை வாடிக்கையாளர்கள் வெறும் 94 ரூபாய்க்கு பெற Paytm அதிரடி சலுகை அறிமுகம் செய்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின் போது மிகக் குறைவாக விற்பனை செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும், ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் 25 ரூபாய் உயர்ந்து, இன்று
810 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை 100 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரை முற்றிலும் இலவசமாக பெறுவதற்கு ஒரு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. LPG நுகர்வோருக்கு Paytm மிகப்பெரிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. அந்த சலுகையின் கீழ் முன்பதிவு செய்தால் ரூ.700 கேஷ்பேக் பெறமுடியும். இந்த சலுகை ஜனவரி 31ஆம் தேதி வரை இருந்த நிலையில், தற்போது பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீங்கள் Paytm மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது 700 ரூபாய்க்கு கிடைக்கிறது.

இதனை பயன்படுத்த Paytm பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து அதில் எரிவாயு முன்பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு 700 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். இதனை நீங்கள் பெற, Reacharge and pay Bills என்ற விருப்பத்தை கிளிக் செய்து Book a cylinder என்பதை கிளிக் செய்ய வேண்டும். அங்கு எரிவாயு சிலிண்டர் தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் உள்ளிட வேண்டும். அதன்பிறகு முன்பதிவு செய்வதற்கு முன்பாக First LPG விளம்பர குறியீட்டை உள்ளிட வேண்டும். அதன் மூலம் நீங்கள் கேஷ்பேக் பெறலாம்.

Categories

Tech |