Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

15 நாட்களில் 26 கொள்ளைகள்…. திணறி வரும் போலீசார்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சக்ரா பட பாணியில் பெரம்பலூரில் நடைபெறும் தொடர் கொள்ளையால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

விஷாலின் சக்ரா பட பாணியில் பெரம்பலூர் அருகே இராமானுஜன் பகுதியில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு நள்ளிரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டின் உரிமையாளரை தாக்கி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இக்கொள்ளை சம்பவங்கள் கடந்த 15 நாட்களில் 10 பகுதிகளில் 26 வீடுகள் மற்றும் கடைகளில் நடந்துள்ளன.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் வரிசையாக புகார் அளித்து வருகின்றனர். மேலும் “இப்பகுதியில் அடுத்த கொள்ளை சம்பவங்கள் நடைபெறும் முன்பாக அக்கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும்” என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இத்தொடர் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறி வரும் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் நடைபெறும் தொடர்ச்சியான கொள்கைகளால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |