சொத்து பிரச்சனை காரணமாக தம்பியின் மனைவியை அண்ணன் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடுகு கிராமத்தில் வீரராகவன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு கோதண்டம் என்ற அண்ணன் உள்ளார். இவர்கள் இருவரும் அருகருகே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவருக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்சனை இருந்த காரணத்தால் குடிபோதையில் கோதண்டம் வீரராகவனின் வீட்டிற்கு முன்பு சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார்.
அப்போது கோதண்டம் மஞ்சுளாவை தகாத வார்த்தைகளால் திட்டியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கோபமடைந்த கோதண்டம் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து மஞ்சுளாவை வெட்டிவிட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த மஞ்சுளாவை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.