Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“நான் அந்த பொண்ண காதலிக்கிறேன்” மறுப்பு தெரிவித்த தாய்…. ராணுவ வீரரின் விபரீத முடிவு….!!

காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒட்டபிடாரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன் முருகன் உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். இதையடுத்து முருகனின் மனைவி சாந்தி குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.

இவர்களது இளைய மகன் பாபு ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவர் விடுமுறை காரணமாக சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் பாபு தன்னுடன் படித்த தோழியை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து வைக்குமாறும் தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு வேறு ஒருவருடன் பாபுவிற்கு நிச்சயம் செய்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த பாபு வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒட்டபிடாரம் காவல்துறையினர் பாபுவின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஒட்டபிடாரம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |