பூ வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் நாராயணா என்ற பூ வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு சில்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு லக்ஷ்மி பிரசன்னா, சுபாஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் நாராயணன் விவசாயிகளிடம் பூ வாங்கி ஓசூர் மார்க்கெட்டில் வைத்து விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல பூ வாங்கி ஓசூர் மார்க்கெட்டில் விற்பனை செய்து விட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது எஸ் முதுகணி பள்ளி பக்கத்தில் உள்ள ஒரு ஆலமரத்தில் நாராயணா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது மனைவி சில்பா அதிர்ச்சி அடைந்து கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.