தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜகவுடன் எந்த தொடர்பும் இல்லை என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
அதுமட்டுமன்றி கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிலையில் அதிமுக மற்றும் பாஜகவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்றம் மட்டும் போதாது. பட்டியல் வெளியேற்றம் தான் நிரந்தர தீர்வு என கூறி அதிமுகவுக்கு செக் வைத்துள்ளார். மேலும் இதுவரை அமைதியாக இருந்த கிருஷ்ணசாமி பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தையும் அறிவித்துள்ளார்.