திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சுங்க கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. மேலும் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சுங்க கட்டணம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கார் ஒன்றுக்கு 15 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், மினி பேருந்து மற்றும் மினி லாரிக்கு 50 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நடைமுறை இன்னும் சில நாட்களில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.