வெகுநாட்களாக மோட்டார் சைக்கிள் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சேர்ந்த திலீப் என்பவர் தனது இருசக்கர வாகனம் காணவில்லை என கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப்புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள CCTV பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு நபர்கள் வாகனத்தின் பூட்டை உடைத்து திருடியது உறுதியானது. அவர்களது அங்க அடையாளங்களை வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இவர்கள் முன்னதாகவே பல திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்துள்ளது. அதில் முதல் குற்றவாளியான யுவராஜ்-ஐ காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவான சரத்பாபுவை கோயம்பேடு காவலர்கள் தனிப்படை அமைத்து தேடியதில் அவர் வேலூரில் வைத்து கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து திருடப்பட்ட 36 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விட்டனர். மேலும் குற்றவாளிகள் அளித்த தகவலின் படி திருடிய வாகனங்களை குளத்தூர் பகுதிகளில் 10000 ரூபாய்க்கு விற்றுவிடுவது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து இன்னும் எங்கெல்லாம் வாகனங்களை பதுக்கி வைத்திருக்கிறார்கள் என போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.