Categories
உலக செய்திகள்

கார் ஓட்டிக் கொண்டு…. பேஸ்புக்கில் உரையாடிய பெண் டிரைவர்…. வைரலாகும் வீடியோ…!!

செல்போன் பார்த்துக் கொன்டே வண்டி ஓட்டிய டிரைவரின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகின்றது.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் சிமியோன் ஹாட்டன் மற்றும் லியாம் ரட்ஜ் இவர்கள் இருவரும் செஸ்டர் நகரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த போது அவர்களது காரை 60 கிலோமீட்டர் வேகத்தில் வேன் ஒன்று கடந்துள்ளது. மேலும் அந்த வேனை ஓட்டிய பெண் டிரைவர் செல்போனில் முகநூல் பக்கத்தை பயன்படுத்திக் கொண்டிருந்ததை கவனித்த அவர்கள் அந்த வேனைப் பின்தொடர்ந்துள்ளனர் .

அதுமட்டுமின்றி அந்த டிரைவர் செல்போன் பயன்படுத்துவதை வீடியோ எடுத்து அதை அவர்களது முகநூல்பக்கத்தில் பதிவு செய்துள்ளர். இதைப் பார்த்த பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Categories

Tech |