புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மதுபான விற்பனை நேரம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதன் ஒரு பகுதியாக மதுபான கடைகள் மூடப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னாள் மதுபான கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன.
இந்நிலையில் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி வரை மது விற்பனை நடைபெறும் நிலையில், இரவு பத்து மணியோடு முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.