Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9,10,11ஆம் வகுப்பு ஆல்பாஸ்… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு ஆல்பாஸ் செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.

தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனையடுத்து அதற்கான அரசாணையை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு பயின்று வருபவர்களின் பெயர் பட்டியல் சார்ந்த பள்ளிகளில் இருந்து பெறப்பட்டதன் அடிப்படையில், அவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான உரிய பதிவுகளுடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |