Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெற்ற மகளை நாசம் செய்த…. கொடூரமான தந்தை…. போக்சோ சட்டத்தில் கைது…!!

திருவண்ணாமலையில் மகளை கற்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அருகே ஆரணியை  சேர்ந்த தம்பதிகள் கன்னியப்பன் (47) –  ராஜேஸ்வரி (45). இவர்களது மகள் குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கன்னியப்பன் தனது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் சம்பவத்தன்று அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பள்ளியில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.உடனே பள்ளி நிர்வாகம் அந்த மாணவியை காமக்கூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளது.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அந்த சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இத்தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை புகார் அளித்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் சமூக நலத்துறை அதிகாரிகள் சிறுமியுடன் விசாரணை மேற்கொண்டதில் தந்தையை மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து கண்ணியப்பனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தை கேட்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Categories

Tech |