திருமணம் முடிந்த நான்காவது நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கீதாநகர் பகுதியில் பஞ்சலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். விக்னேஷ் குமார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சென்ற திங்கட்கிழமை அன்று இவருக்கு வைஷ்ணவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
இதையடுத்து கணவன் மனைவி இருவரும் சிறுபூலுவபட்டி பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று விக்னேஷ் குமார் குளிக்க போவதாக கூறி குளியலறைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரது தந்தை பஞ்சலிங்கம் குளியலறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு அவரது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அவரது உறவினர்கள் விக்னேஷ் குமாரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர. அங்கு அவர் இறந்தது தெரியவந்தது . விக்னேஷ் குமார் இறந்த செய்தியை கேட்ட அவரது மனைவி மற்றும் தந்தை பஞ்சலிங்கம் ஆகிய இருவரும் கதறி அழுதனர். இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.