Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

1 1/2 வருடம் ஆகியும் அனுமதி தரல… அரசு அலைக்கழித்ததால் ஆவேசம்… எச்சரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!!

காமராஜர் சிலை வைப்பதற்கு அனுமதி தராததால் இறச்சகுளம் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை அடுத்துள்ள இறச்சகுளம் பகுதி மக்கள் 2019 ஆம் ஆண்டில் காமராஜர் அவர்களுக்கு சிலை வைக்க முடிவு செய்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு ஒன்றை அளித்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அந்த மனுவை தமிழக அரசிற்கு அனுப்பி வைத்தார். மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலை அமைப்பதற்கான பணிகலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது காமராஜர் சிலை வைப்பதற்கான வேலை மட்டுமே இருக்கிறது.

ஆனால் இதுவரையில் இதற்கான முறையான அனுமதியை தமிழக அரசு வழங்கவில்லை எனவும், முறையற்ற காரணங்களை கூறி அலைக்கழிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு அனுமதி தரும் வகையில் இறைச்சகுளத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் காமராஜர் சிலை அமைக்கப்படும் இடத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது இதற்குபின்னரும் அனுமதி வழங்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் இருப்போம் என அவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |