தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்று நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்தும் ஒரு சில கட்சிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ பழ .கருப்பையா மக்கள் நீதி மையத்தில் இணைந்துள்ளதாகவும் அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கமல் அறிவித்துள்ளார். சட்ட பஞ்சாயத்து இயக்கமும் மக்கள் நீதி மையத்தில் இணைந்து தேர்தல் பணியாற்றும் எனவும் தெரிவித்துள்ளார். சீமானின் நாம் தமிழர், கமலின் மக்கள் நீதி மையம், சரத்குமாரின் சமக, பாரிவேந்தரின் ஐஜேகே உள்ளிட்ட பல கட்சிகள் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.