Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை முழுவதும் இன்று மாலைக்குள்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னை முழுவதும் கட்சி தொடர்பான விளம்பரங்களை உடனே அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாக அதிமுக தமிழகத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சி தொடர்பான விளம்பரங்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு இடங்களில் அரசியல் கட்சிகள் தொடர்பான சுவர்களில் உள்ள வாசகங்கள், சுவரொட்டிகள், பதாகைகள், கொடிகள் உள்ளிட்டவற்றை இன்று மாலைக்குள் அகற்றவேண்டும். ரயில் நிலையங்கள், போக்குவரத்து நிலையங்களில் நாளைக்குள், தனியார் இடங்களில் திங்கள் கிழமைக்குள் அனைத்து கட்சி விளம்பரங்களும் அகற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

Categories

Tech |