நைஜீரியாவில் பெண்கள் பள்ளியில் பயங்கரவாத கும்பல் அதிரடியாக நுழைந்து 317 மாணவிகளை கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் உள்ள பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிகள் ஏந்திக்கொண்டு Zamfara மாநிலத்தில் இருக்கும் Jangebe அரசு பெண்கள் பள்ளிக்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். அதன்பிறகு அங்கிருந்த சுமார் 317 மாணவிகளை கடத்திச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த பயங்கரவாதிகள் நள்ளிரவில் பள்ளிக்கு வந்து துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமிகளை கடத்தி சென்றதோடு சில மாணவிகளை நடக்கச்சொல்லி இழுத்து சென்றிருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து Zamfara மாநிலத்தின் காவல்துறையினருடன் இணைந்து நைஜீரிய இராணுவத்தினரும் அனைத்து மாணவிகளையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் நைஜீரியாவில் நடந்த கடத்தலில் கடந்த ஒரே வாரத்தில் இது இரண்டாவது சம்பவமாகும். மேலும் கடந்த வாரத்தில் Niger மாநிலத்தில் பயங்கரவாத கும்பல் பள்ளி மாணவர்கள் 27 பேர் உள்ளிட்ட 42 நபர்களை கடத்தி சென்றபோது அதில் ஒரு மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். மேலும் அவர்கள் தற்போதுவரை விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.