Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இந்த அங்கீகாரம் வேண்டும்… இது தான் எங்கள் நோக்கம்… டாக்டர். கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி…!!!

பட்டியில் இன பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளர் பெயரை நீக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் பேட்டி.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த டாக்டர். கிருஷ்ணசாமி புதிய தமிழகம் கட்சி சார்பில் பட்டியலில் உள்ள 6 பிரிவு வகுப்புகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என அறிவிப்பதற்காக பல்வேறு சட்டப்பேரவைகளில் குரல் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். இதற்காக பல போராட்டங்களையும் செய்து வருகிறோம் என கூறியுள்ளார். இதனை ஆய்வு செய்த மாநில உயர் மட்ட அதிகாரிகள் மத்திய அரசிடம் தேவேந்திரகுல வேளாளர்கள் என அங்கீகரிக்க பரிந்துரை செய்ததுள்ளது.

ஆனால் எங்களுக்கு பெயர் மாற்றம் மட்டும் தேவை இல்லை எனவும், பட்டியல் பிரிவில் இருந்து எங்கள் பெயரை வெளியேற்றுவதே எங்களின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்துள்ளனர். மேலும், எங்கள் பிரிவு மக்களுக்கு அங்கீகாரம் என்பது கட்டாயமாக்க வேண்டும் என கூறினார். இதனால் தாழ்ந்த பட்டியல் பிரிவிலிருந்து தங்களின் பெயரை நீக்க வேண்டும் என கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Categories

Tech |