பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க பைசர் மருந்து சிறந்த பலனை அளிப்பதாக தெரியவந்துள்ளது.
உலகின் பல நாடுகளில் தற்போது தடுப்பூசி போடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பைசர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கேம்பிரிட்ஜ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது, எங்களுடைய சுகாதார பணியாளர்களுக்கு பைசர் மருந்தின் ஒரு டோஸ் செலுத்தப்பட்டது.
இதன் மூலம் பைசர் மருந்து கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கும் என்று தெரியவந்துள்ளது. இதற்குமுன் இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வின் போதும் இந்த தடுப்பூசி நல்ல பலன் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 10லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம் நடத்தப்பட்ட பைசர் தடுப்பூசி மருத்துவ சோதனையில் இந்த மருந்து சிறந்த பலனை அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.